என் அன்புக்குரிய உறவுகளே,

வாணர கலை அரங்கம் நிறுவப்பட வேண்டும் என்பது தொடர்பாக எனது எண்ணங்களை தங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகின்றேன். தெரிவிக்கின்றேன் நான். தீர்மானிப்பது நீங்கள் சிந்தித்துச்செயலாற்றுவீர்கள் என்ற நம்பிக்கை எனக்குண்டு.
நன்றி
பேராசிரியர் கா. குகபாலன்

வாணர் கலையரங்க நிர்மாணம்
எமது வரலாற்றுக்கடமை

வழிகாட்டி பெரியவாணர்

தோணிகளிற் கால்வைத்து எறின் கொஞ்சத்
தூரந்தான் மிதக்குமவை! பொறுக்கும் சேற்றில்
ஆனென்ன! பெண்ணென்ன! குழந்தையென்ன!
அகலாத நோய்பிடித்த கிழந்தானென்ன!
நாணின்றி ஆடைகளைத் தூக்கித் தூக்கி
நடுக்கடலிற் புதைசேற்றில் நடந்து காட்சி
தோணுதையா மனப்படத்தில்! துயரம் யாவும்
தொலைந்திடுமோ வாணர்வந்து தோன்றா விட்டால்?

நிறைமாதக் கர்ப்பிணியும் வயிறு நொந்தே
நெடுநேரம் தோணியிலே நின்று கொண்டு
இறiவா எம் விதியோ தான் இதுவே என்று
ஏங்கிடுவாள்! அழுதிடுவாள்! என்ன வாழ்வு!
மறையாதோ இக் கொடுமை என்றென் றெண்ணி
மகவுதனைப் பெற்றிடுவாள் தோணிக் குள்ளும்
கறைபடிந்த வாழ்விதுவும் கலைந்த தம்மா!
கண்ணியஞ்சார் வாணர்வந்து பிறந்த தாலே!

தொண்டர் சின்னவாணர்

சிங்கப்பூர் தனில் நின்றும் மீண்டு வந்தே
செயற்கரிய பணிபுரியத் திட்டம் இட்ட
துங்கமிகு அண்ணாவாம் பெரிய வாணர்
சொல் திட்டம் உருவாக்கத் துணையாய் நின்றோய்
எங்கெங்கும் புகழ்பரவப் புங்கை யூரும்
இனிதோங்க ஈர்பத்து ஆண்டின் மேலாய்ச்
சங்கையுடன் தொண்டாற்றி வாழ்ந்த எங்கள்
தனித்தலைவா! தமிழ்போலத் தழைத்து வாழி!

புங்கை நகர் வேலணையூர் இணைய நல்ல
பொலிவுடைய புதுப்பாலம் போட்டோய் வாழி!
வங்கமலி சிங்கப்பூர் மருவிப் பண்பால்
மலர்த்துழைத்து நிதி திரட்டி வந்தே யீங்கு
மங்களமார் கற்பகப் பேர் மங்கை நல்லாள்
மனமகிழ வாழ்ந்து நிற்கும் மகிபா! வாழி
பொங்கு புகழ்ச் சுற்றமுடன் பொலிந்தே வாழி
பொன்னரங்கும் ஓங்கிடவே வாழி! வாழி!
ஆக்கம்
வித்துவான் சி. ஆறுமுகம்

1977ம் ஆண்டு அம்பலவாணர் அரங்கு திறப்புவிழா தொடர்பாக வெளியிடப்பட்ட சிறப்பு மலரில் மதிப்புக்குரிய அமரர் வித்துவான் சி. ஆறுமுகம் அவர்கள் சிந்தனையில் உருவான கவிதையே இவையாகும். பிரித்தானியர் ஆட்சிக்காலத்தில் எமது கிராமத்தில் உதித்து சிங்கப்பூரின் வளர்ச்சியினை நேரில் கண்டு அது போல தாம் பிறந்த புங்குடுதீவுக் கிராமத்தினை விருத்தி செய்ய வேண்டுமென்ற பேரவாவினைச் செயல்வடிவத்தில் நிரூபித்துக்காட்டிய பெருந்தகையவர்களே வாணர் சகோதரர்களாவர். அவர்கள் எமது கிராமத்தில் பிறந்திருக்காவிடில் நாம் தோணியிலே தொலைதூரம் செல்லும் நிலை தொடர்ந்திருக்கும் கிராமத்தின் பொருளாதார, சமூக, பண்பாட்டு நிலைகள் குறிப்பாக கல்விநிலை பின் தங்கியதாகவே இருந்திருக்கும் என்பதில் ஐயமில்லை. இன்று உள்நாட்டிலும் சர்வ தேசங்களிலும் கிராமத்துக்கு பெருமை தேடித் தரும் எம்மவர்களின் உயர்கல்வி, உயர்தொழில் என்பவற்றிற்கு அத்திவாரம் இட்டவர்கள் வாணர் சகோதரர்களே. இதனை யாரும்மறந்து விடக்கூடாது. மறப்பது நியாயமில்லை.

புங்குடுதீவு – வேலணை தாம் போதி தான் இலங்கையில் நீளமானது. (3 மைல் ஃ5 கி. மீற்றர்) இதனை தொழில்நுட்ப வளர்ச்சி குறைவாக விருந்த காலத்தில் தாம் போதியின் தேவையின் முக்கியத்துவத்தை அரசுக்கு உணர்த்தி தாமும் இணைந்து செயற்படுத்தி சாதனை படைத்தவர்கள் தான் வாணர் சகோதரர்கள். அன்று இதனைச் செய்திருக்காது விடில் இன்ற அது சாத்தியப்படாதிருந்திருக்கும் என்பதில் ஐயமில்லை. அதாவது ஒரு கிலோ மீற்றர் நீளமானதும் ஆழம் குறைந்ததுமான வேலணை – அரரலித்தாம் போதியை நிறுவித்தருமாறு சுதந்திரத்தைத் தொடர்ந்து 68 வருடங்களாக அரசினைக் கேட்டுக் கொண்ட போதிலும்அரசு அதற்குச் செவிசாய்க்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. (இவை தவிர வாணர் சகோதரர்கள் கிராமத்துக்கு ஆற்றிய பணிகளைப் பற்றி மேலும் கூறப்பட்டுள்ள கவிதைகளிலே குறிப்பிடப்பட்டுள்ளது)
1977ம் ஆண்டு வாணர் சகோதரர்களின் அரும்பணியை நினைவு கூரும் முகமாக வாணர் அரங்கு கட்டப்பட்டு நாட்டில் பிரபல்யமானவர்களை அழைத்து திறந்து வைக்பப்பட்டது குறிப்பாக யாழ் நீதிபதி கே. வி. நவரத்தினம் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் அல்பிரட் தம்பிஐயா, மாவட்ட நீதிபதி என். ஆனந்தகுமாரசாமி, பேராசிரியர், க. கைலாசபதி போன்ற பலர் பங்குபற்றி சிறப்பித்தனர். அவர்கள் யாவரும் புங்குடுதீவு மக்களுக்கு ஒளிவிளக்கேற்றிய வாணர் சகோதரர்களுக்கு அரங்குமட்டும் போதாது, மணி மண்டபம் கட்டி அவர்களுக்கு காணிக்கையாக்குவதே புங்குடுதீவு மக்கள் எதிர்காலத்தல் செய்ய வேண்டிய பணி என மலரில் எழுதியும் மேடையில் பேசியும் சென்றமையை நினைத்துப் பார்க்கின்றேன்.

1970களைத் தொடர்ந்து யுத்த நிலைமையினால் எமது கிராமத்து உறவுகளில் பெரும்பாலானோரை நாற்திசையும் நகர வைத்துவிட்டது. இருப்பினும் கிராமத்தில் இன்றும் மக்கள் வாழ்ந்து வருகின்றார்கள். அவர்கள் பொருளாதார ரீதியில் நலிவுற்றவர்களாகவுள்ளனர். எனினும் எதிர்காலத்தில் அவர்கள் வாழ்வு வளம் பெற வாய்ப்புண்டு. விவசாயம் சார் சமூகத்தினரில் பெரும்பாலானோர் புலம் பெயர்ந்து விட்டனர். இது கிராமத்தின் பொருளாதார, சமூக, பண்பாட்டு நிலையில் பெரும் தாக்கத்தினை ஏற்படுத்தியுள்ளது என்பது உண்மை. இந்நிலையில் கிராமத்திலிருந்து புலம் பெயர்ந்த முதலாவது பரம்பரையினர் தான் வாணர் சகோதரர்களின் சேவையினைப் பகிர்ந்து கொண்டவர்கள். நன்கு உணர்ந்தவர்கள். இரண்டாவது, மூன்றாவது பரம்பரையினரின் கிராமத்து உறவு என்பதில் காலம் தான் பதில் சொல்லும்.
இந்நிலையில் வாணர் சகோதரர்களின் சேவை தொடர்பாக நான் நீண்ட காலமாக எழுதியும் பேசியும் வருகின்றேன். அவர்களின் நினைவாக எதிர்கால சந்ததியினருக்கு எடுத்துக் கூறும் வகையில் அரங்கம் ஒன்றும். வளைவு ஒன்றும் கட்டப்பட வேண்டும் எனக் கூறி வந்துள்ளேன். கனடாவுக்கு நான் சென்றிருந்த போது திரு பொன் சுந்தரலிங்கம், திரு ச. சதாசிவம், திரு சே. சந்திரலிங்கம் போன்ற பலர் வாணர்நினைவாக புங்குடுதீவில் கலையரங்கம் நிறுவப்படுதல் தொடர்பாக ஒன்றுகூடலை ஏற்பாடு செய்திருந்தனர். அதில் பங்கு பற்றும் வாய்ப்பு எனக்கு கிட்டியது அரங்கம் நிறுவப்பட வேண்டும் என வந்திருந்தோர் அனைவரும் ஏகமனதாக தெரிவித்தனர். இச் செய்தியானது எனக்கு மட்டற்ற மகிழ்ச்சியைத் தந்தது. இணைந்து செயற்படவிருப்பம் தெரிவித்தேன்.

புங்குடுதீவுக்கிராமத்திற்கு ஏன் கலையரங்கம்?

புங்குடுதீவுக்கிராமத்தில் மக்களில்லை. கிராமம் காடாகிவிட்டது அங்கு ஏன் கலையரங்கம் எனக் கேட்போரும் எம்மிடையேயுள்ளனர். அது அவர்களின் நிலைப்பாடு. ஆனால் நான் புலம் பெயராது கிராமத்தோடு நெருங்கிய தொடர்பிலிருப்பவன். கிராமத்திலிருந்து மக்களின் கணிசமானோர் இடம் பெயர்ந்து வாழ்வது என்பது உண்மை. ஆனால் கிராமத்தில் இன்னும் ஏறத்hழ 5000 மக்கள் வாழ்ந்து வருகின்றனர் என்பதை நாம் உணர வேண்டும். அசாதாரண சூழ்நிலையில் சிக்கியுள்ள கிராமமொன்றில் மீண்டும் பொருளாதார சமூக பண்பாட்டு வளர்ச்சி ஏற்படும் போது மீண்டும் பூர்வீக மண்ணுக்கு மக்கள் மீள்வது தொடர்பாக சர்வதேச உதாரணங்கள் பலவுள்ளன. அதே போலவே புங்குடுதீவு கிராமத்திற்கு மக்கள் உள்வரவு படிபடியாக ஏற்பட வாய்ப்பு அதிகரித்து வருகின்றது. குறிப்பாக எமது கிராமத்து புலம் பெயர் உறவுகள் குறிப்பாக இறுப்பிட்டிக்கிராமத்தில் லண்டனைச் சேர்ந்த திரு. சு. கிருஷ்ணப்பிள்ளை அவர்களின் முயற்சியினால் பாரிய அபிவிருத்தித்திட்டமொன்றும், திரு. குமாரதாஸ், கலாநிதி தேவமனோகரன் போன்றோருடன் இணைந்து பல கிராமத்து நண்பர்கள் நடுத்துருத்திக் கிராமத்தில் பல நோக்குத்திட்டமொன்றும் மடத்துவெளியில் திரு சண்முகநாதன் அவர்களின் முயற்சியினால் விவசாய அபிவிருத்தித்திட்டமொன்றும் முன்னெடுத்துச் செல்லப்படுகின்றன. இத்தகை திட்டங்கள் கிராமத்து உறவுகளை உள்வருவதற்காக வழியாகவே கருத முடியும். இவ்வாறான அபிவிருத்தி செயற்திட்டங்கள் நடைமுறைப்படுத்தும்போது சமூக பண்பாட்டு விழுமியங்களையும் இணைந்தே முழுமையைப் பெற முடியும் எனவே கிராமத்திற்கு ஒரு கலையரங்கம் அவசியம் வேண்டப்படுகின்றது.

தற்போது வாணர் அரங்கு புங்குடுதீவு கிழக்கிலுள்ளது. இவ்வரங்கு புங்குடுதீவு மத்தியில் அமைவதே நன்று என எண்ணுபவர்களும் இல்லாமலில்லை. அக்கருத்தானது பிழையெனக் கொள்ளவும் முடியாது. புங்குடுதீவு மத்தியில் பொருத்தமான நிலமில்லை. அது ஒரு புறமிருக்க வாணருக்காக அரங்கு ஒன்று 40 ஆண்டுகளுக்கு முன்னர் நன்கொடையாக கிடைக்கபெற்ற நிலம், இலகுவான போக்குவரத்து வழி, வாணர் சகோதரர் வாழ்ந்த பிரதேசம் போன்ற பல அம்சங்களைக் கொண்ட குறித்த பிரதேசத்தில் அமைக்கப்பட்டுள்ளது. இன்றைய சூழ்நிலையில் பரந்த நிலப்பரப்பு நவீன போக்குவரத்து வசதி, வாகனப்பரம்பலின் அதிகரிப்பு, பிரதான வீதியைச் சார்ந்து காணப்படுகின்றமை, அதிகரித்த மக்கள் செறிவைக் கொண்ட பகுதியாக விடுகின்றமை. போன்ற பல காரணிகள் ஏற்கனவே அரங்கு அமைக்கப்பட்ட இடமே கலை அரங்கம் அமைப்பதற்குப் பொருத்தமானது என்பதை உணரலாம். அத்துடன் ஓரளவு உவர்த்தன்மை கொண்ட நீர்வளம் கொண்ட பகுதியாகவும் இது காணப்படுகின்றது.

• இன்றைய சூழலில் யாழ் குடாநாட்டில் மூலைக்கு மூலை பொது மண்டபங்கள் உண்டு. அவை வௌ;வேறு நோக்கங்களுடனானது. இங்கே அமைக்க எண்ணியுள்ள அரங்கமானது பல்வேறு தேவைகளைப் பூர்த்தி செய்யும் நோக்குடனேயே அமைக்கப் படவுள்ளது. எமது கிராமத்தில் நிகழக்கூடிய பொது நிகழ்வுகள், கலைநிகழ்வுகளை நடாத்தக்கூடிய அரங்குகள் இல்லை குறிப்பாக கலை நிகழ்ச்சிகள், குறிப்பாக நடனம், சங்கீதம், மற்றம் கவின்கலைகளை ஊக்குவித்து வரலாற்றில் எம்மவர்கள் சாதித்த பெருமைகளை மீளக்கொண்டு வர வாய்ப்புண்டு
• கலையரங்க வளாகத்தில் அறநெறிப்பாடசாலையினை நிறுவிக் கொள்ள முடியும். இவை எதிர்கால மாணவர்களின் சமய அறிவு, ஒழுக்கம் என்பவற்றை மேம்படுத்தலாம்.
• கல்விநிலையினை மேம்படுத்துவதற்கு குறிப்பாக க. பொ. த (சா. த) க. பொ. த (உ.த) மாணவர்களுக்கான கருத்தரங்குகள், விசேட வகுப்புக்களை நடாத்துவதற்கு பேருதவியாக இருக்கும்.
• தீவக மட்டம், கோட்டமட்டம் ரீதியாக மாணவர்கள் கருத்தரங்குகளில் பங்குபற்றுவதன் வாயிலாக அனைத்து தீவக உறவுகளுடன் நெருங்கிய தொடர்பினை ஏற்படுத்pக் கொள்ள வாய்ப்புண்டு.
• புலம் பெயர் எம்மவர்களையும் கிராமத்து உறவுகளையும் இணைக்கும் பாலமாக இவ்வரங்கம் செயற்பட வாய்ப்புண்டு. அதாவது கலாசார பரிமாற்றங்களை பகிர்ந்து கொள்வதன் வாயிலாக உறவுகள் பலப்பட முடியும்.

இவை போன்ற பல நன்மைகள் கிட்டக் கூடிய வாணர் கலையரங்கமானது இன்றைய சூழ்நிலையில் புங்குடுதீவுக் கிராமத்திற்கு அத்தியாவசியமானது என்பதே எனது தாழ்மையான கருத்தாகும்.

அரங்கம் நிறைவு பெற நாம் என்ன செய்யலாம்?

வாணர் சகோதரர்கள் எமது கிராமத்தில் பிறந்திருக்காவிடில் எமது நிலை எவ்வாறிருந்திருக்கும் என்பதை சற்று பின் நோக்கி சிந்தியுங்கள். அவர்களது சிந்தனை தங்களது குடும்பத்திற்காகவல்லாது ஒட்டுமொத்தக் கிராம மக்களுக்குரியதாகவே யிருந்துள்ளது. அவர்களின் தன்னலமற்ற சேவையினைப் பெற்றுக் கொண்ட புங்குடுதீவு மக்களில் தற்போது வாழ்ந்து வரும்; யாவரும் இணைந்து அவர்கள் தம் பெயர் துலங்க எதிர்கால கிராம மக்களிடையே அவர்களின் நாமம் தொடர அரங்கினை அமைப்போம்
அரங்கு நிர்மாணிப்பதற்காக நிதி, நிர்மாணித்த பின்னர் அதனைப் பராமரிப்பதற்கான வழிவகைகள் என்பன பற்றி எம்மிடையே கேள்விகள் இருக்கலாம். ஆனால் திட்டமிட்ட ரீதியில், சிறந்த நிர்வாகத்திறனுடன் கூடிய பரிபாலன சபையின் வழிகாட்டலின் கீழ் அரங்கம் செயற்பட வைக்க முடியும். உள்நாட்டில் அரங்கு அமைப்பதற்கான நிதியினைப் பெற்றுக்கொள்ள முடியாது. புலம் பெயர் எமது உறவுகளே இதனைப் பூர்த்தி செய்ய முடியும். எனவே இது தொடர்பாக சிந்தியுங்கள் செயற்படுங்கள்.

கலை அரங்கினைப் பராமரிப்பது தொடர்பாகவும் சிந்திக்க வேண்டும். இதற்கு உள்நாட்டு, புலம்பெயர் உறவுகளை இணைத்த செயற்குழு அமைக்கப்படுதல் வேண்டும். குறிப்பாக இவ்வரங்கத்தில் ஏற்பாடு செய்யப்படும் நிகழ்வுகளுக்கு ஒரு தொகை நிதியினைப் பெறுவதன் வாயிலாக நிர்வாகச் செலவுகள் ஈடு செய்யும் வாய்ப்புண்டு.
இறுதியாக, யாராவது அரங்கம் ஏன் என்பது தொடர்பாகவோ அரங்கத்தின் அமைவிடம் தொடர்பாக சிந்தித்திருப்பீர்களாயின் அதனை மறுபரிசீலனை செய்து திரு.பொன் சுந்தலிங்கம் அவர்களோடு இணைந்து பணியாற்றுவதன் மூலம் சமூகப் பணியை முன்னெடுத்துச் செல்வதற்கு ஒத்துழைக்குமாறு அன்புடன் கேட்டுக் கொள்கின்றேன்.

அன்புடன்

பேராசிரியர் கா. குகபாலன்
B.A.Hons,M.A,Ph.D
J.P (Whole Island)
முன்னாள் தலைவர், புவியியற்றுறை
யாழ்பல்கலைக்கழகம்.

About The Author

Related Posts

Leave a Reply

Your email address will not be published.